search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாசில்தார்கள் பணியிட மாறுதல் - விடுப்பு கேட்டு மனு அளித்தால் ஒழுங்கு நடவடிக்கை

    திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் ராசு, அவிநாசி மண்டல துணை தாசில்தாராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் துணை தாசில்தார் 6 பேர் போலீஸ் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் பயிற்சி முடித்த சித்தையன் தாராபுரம் மண்டல உதவி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சுந்தரமூர்த்தி திருப்பூர் தெற்கு தலைமையிடத்துக்கும், பாரதிராஜா உடுமலை அமராவதி சர்க்கரை ஆலைக்கும், பிரகாஷ் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவுக்கும், கவுரி திருப்பூர் வடக்கு தலைமையிடத்துக்கும், கலைவாணி ஊத்துக்குளி தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் வடக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் ராசு, அவிநாசி மண்டல துணை தாசில்தாராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். 

    அவிநாசி மண்டல துணை தாசில்தாரான கீர்த்தி பிரபா, கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், திருப்பூர் தெற்கு தலைமையிடத்து துணை தாசில்தார் பெரியசாமி கனிம வள துணை தாசில்தாராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள பணிமாறுதல் நியமனங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    மாறுதலை தவிர்ப்பதற்காக விடுப்பு கேட்டு மனு அளிப்பது, மாறுதல் செய்யப்பட்ட பணி இடத்தில் இணைவதற்கு தவறினால், குடிமைப் பணிகள் விதிகள்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×