என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்.
  X
  கொரோனா வைரஸ்.

  கொரோனா பாதிப்பு - பள்ளிகளில் தூய்மைப்பணிகள் தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மாணவர், ஆசிரியர், பணியாளர் உட்பட 61 பேருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா சிகிச்சை முடிந்து 84 பேர் வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 90,270 பேர் தொற்று குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.நேற்று புதிதாக மேலும் 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 92,125 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

  நேற்றைய நிலவரப்படி 908 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 947 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
  திருப்பூர் மாவட்டத்தில் நேற்று வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்  4 மாணவர்கள், வெள்ளகோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்கள், சேவூர் அரசு பள்ளியில் 2 பேர் என 9 மாணவர்களுக்கும், உடுமலை எஸ்.வி.ஜி., பள்ளியில் பணியாளர் ஒருவருக்கும் என 10 பேருக்கு தொற்று உறுதியானது. 

  இதில் வெள்ளகோவில் மற்றும் வீரபாண்டி ஆகிய இரு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இரு பள்ளிகளிலும்  தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, உடன் படித்த மாணவர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மாணவர், ஆசிரியர், பணியாளர் உட்பட 61 பேருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 
  Next Story
  ×