என் மலர்
செய்திகள்

பைக்காரா அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளதை காணலாம்
மின் உற்பத்தியை அதிகரிக்க பைக்காரா அணையில் தண்ணீர் திறப்பு
பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 85 அடிக்கு தண்ணீர் உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் கெத்தை, குந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, மாயார், கிளன்மார்கன், முக்கூருத்தி, பார்சன்ஸ்வேலி, மரவகண்டி, காமராஜ் சாகர் அணை ஆகிய 12 அணைகள் உள்ளன. இங்கு குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் 12 மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் பல மாவட்டங்களில் தனியார் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மின் பயன்பாடு குறைவாக இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக அனைத்து நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இதனால் மின்தேவை அதிகரித்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு நீலகிரியில் மின்வாரியம் மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பைக்காரா அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 85 அடிக்கு தண்ணீர் உள்ளது. கடந்த 3 மாதங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. இதேபோல் மற்ற மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் தினமும் 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. தற்போது தினமும் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் மின் பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்றனர்.

Next Story