search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனிவேல் தியாகராஜன்
    X
    பழனிவேல் தியாகராஜன்

    செஸ் வரியை ரத்து செய்தால், ஜி.எஸ்.டி.-க்குள் பெட்ரோல், டீசல் விலை: பழனிவேல் தியாகராஜன்

    பெட்ரோல், டீசல் விலை மீதான ஜி.எஸ்.டி. விவகாரத்தில் வரி நிலைமை மாறியதால் எங்களுடைய நிலைப்பாடு மாற்றப்பட்டுள்ளது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 250 புதிய தள்ளு வண்டிகளை வழங்கிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.-யின் கீழ்கொண்டு வரும் நிலைப்பாட்டை தி.மு.க. மாற்றிக்கொண்டதா? என முன்னாள் முதல்வரும், முன்னாள் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ‘‘பெட்ரோல், டீசல் விலை மீதான செஸ் வரியை ஒன்றிய அரசு ரத்து செய்யுமானால், ஜி.எஸ்.டி-க்குள் இரண்டின் விலையையும் கொண்டு வரத்தயார்.

    பெட்ரோல், டீசல் விலை மீதான ஜி.எஸ்.டி. விவகாரத்தில் வரி நிலைமை மாறியதால், நிலைப்பாடும் மாற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

    கடந்த வாரம் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட அனைத்து உறுப்பினர்களும் ஜி.எஸ்.டி.-க்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×