என் மலர்

  செய்திகள்

  வழக்கு பதிவு
  X
  வழக்கு பதிவு

  அன்னவாசல் அருகே இருதரப்பினர் இடையே தகராறு- 8 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அன்னவாசல் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  அன்னவாசல்:

  அன்னவாசல் அருகே வீரப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி கவுசல்யா. அதே ஊரை சேர்ந்த மேகநாதனுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னையும், தன் குடும்பத்தினரையும் மேகநாதன் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், மேகநாதன், மாயழகு, மனோகரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் பின்னர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மேகநாதன், மாயழகு இருவரையும் தாக்கியதுடன், அவர்கள் வீட்டையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுகுறித்து மேகநாதன் அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியன், பாரதிராஜா, செவ்வந்தி, ஆறுமுகம், ராம்கி, ராகுல், பொன்னுசாமி, சோலைக்குமார் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×