என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
போலி ஆவணங்களுடன் திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது
வேலைக்காக திருப்பூர் வரும் வங்கதேசத்தினர் கொல்கத்தா வந்து அங்கிருந்து திருப்பூர் வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேச நாட்டை சேர்ந்த தொழி லாளர்கள் பலர் போலி ஆவணங்களுடன் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து கடந்த ஒரு மாதமாக திருப்பூர் மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி , போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்கதேச தொழிலாளர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பெருமாநல்லூர் காலாம்பாளையம், பரமசிவபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வங்கசேத்தினர் சிலர் பதுங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் அப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் வங்கதேச நாட்டை சேர்ந்த 8 பேர் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலைக்காக திருப்பூர் வரும் வங்கதேசத்தினர் கொல்கத்தா வந்து அங்கிருந்து திருப்பூர் வருகின்றனர். கொல்கத்தா கும்பல்தான் வங்கதேசத்தினருக்கு இந்திய நாட்டிற்கான அடையாள அட்டையை தயாரித்து கொடுக்கின்றனர். அதனை வைத்துக்கொண்டு திருப்பூர் வருகின்றனர்.
எனவே போலி ஆவணங்களை தயாரித்துகொடுக்கும் கொல்கத்தா கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story