என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் மகள் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  களக்காடு:

  நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுத்தெரு, தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகியநம்பி (வயது 58). சம்பவத்தன்று அழகியநம்பி தனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.

  மலையடிபுதூர் நவாச்சாலையில் வந்த போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டில் சரிந்து விழுந்தது. இதில் அழகியநம்பி படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×