என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி படுகொலை - விசாரணையில் பரபரப்பு தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளக்காதல் தகராறில் கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  பு.புளியம்பட்டி:

  கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (வயது52). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மரகதம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவனர பிரிந்து சென்று விட்டார்.

  செல்வன் தனது மகளை ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன் பாளையம் காலனியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். செல்வன் மகள் வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

  இந்த நிலையில் நேற்று காலை செல்வன் வெங்கநாயக்கன்பாளையம் காலனி பெருமள்கோவில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

  இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். செல்வன் உடல் அருகே ஹாலோ பிளாக்கல் கிடந்தது. எனவே அவர் தலையில் யாரோ மர்ம நபர் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

  இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

  அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் நொச்சிக்குட்டை எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பொண்ணுகுட்டி என்கிற பண்ணாரி (42) என்பதும் அவர் தான் செல்வனை கொலை செய்தது தெரிய வந்தது.

  இந்த கொலை குறித்து போலீசார் கூறியதாவது:-

  செல்வன் கட்டிட வேலைக்கு செல்லும் போது நொச்சிக்குட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதேசமயம் அந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பொண்ணுகுட்டி என்கிற பண்ணாரி உடனும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

  இந்த நிலையில் அந்தப்பெண் செல்வன் உடன் தொடர்பு வைத்திருப்பதை பண்ணாரி கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வெங்கநாயக்கன் பாளையத்தில் உள்ள கட்டிடத்தில் செல்வனும் அந்தப் பெண்ணும் ஒன்றாக இருந்துள்ளனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பண்ணாரி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அங்கிருந்து சென்று விட்டார். எனினும் ஆத்திரம் அடங்காத பண்ணாரி அருகிலிருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து செல்வன் தலையில் தாக்கியுள்ளார். இது செல்வன் பரிதாபமாக இறந்துள்ளார்.

  இவ்வாறு போலீஸ் தெரிவித்தனர்.

  மேலும் கட்டிட தொழிலாளி பண்ணாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையை அவர் மட்டும் செய்தாரா? அல்லது அந்த பெண்ணுக்கும் கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×