search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறையாறில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை படத்தில் காணலாம்.
    X
    பொறையாறில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை படத்தில் காணலாம்.

    திருக்கடையூர், பொறையாறு, செம்பனார்கோவில் பகுதிகளில் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

    திருக்கடையூர், பொறையாறு, செம்பனார்கோவில் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்தநிலையில் திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், கிள்ளியூர், டி.மணல்மேடு அன்னப்பன்பேட்டை, கிடங்கல், மாமாகுடி, மடப்புரம், காலமநல்லூர், வளையல் சோழகன், சீவக சிந்தாமணி, சரபோஜிராஜபுரம், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நேற்று தரங்கம்பாடி, பொறையாறு, சங்கரன்பந்தல், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, தில்லையாடி, காட்டுச்சேரி, விசலூர், திருவிடைக்கழி, காழியப்பநல்லூர், நல்லாடை, அனந்தமங்கலம், திருவிளையாட்டம், அரசூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், நரசிங்கநத்தம், செம்பனார்கோவில், பரசலூர், மேலப்பாதி, கருவாழக்கரை, கீழையூர், கஞ்சாநகரம், கிடாரங்கொண்டான், புன்செய், ஆறுபாதி, வடகரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×