search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மக்கள் இயக்கம்
    X
    விஜய் மக்கள் இயக்கம்

    உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?

    மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 என 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    மக்கள் இயக்க கொடியுடன் விஜய்

    மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிகிறது. மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் தனது படத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உள்ளாட்சி தேர்தலில் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 
    Next Story
    ×