என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
பாசஞ்சர் ரெயில் இயக்கப்படாததால் தவிக்கும் பயணிகள்
தற்போதைய சூழலில் ஒரு மாநிலம் குறிப்பிட்ட மாவட்டத்துக்கான ரெயில் இயக்கம் குறித்து அந்தந்த மாநில முதல்வர், சுகாதாரத்துறை முதலில் முடிவெடுக்க வேண்டும்.
திருப்பூர்:
கொரோனா பாதிப்புக்கு முன் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் 6 பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டன. மாதாந்திர சீசன் பாஸ் பெற்று 5 ஆயிரம் பேர் வரை பயணித்து வந்தனர்.
தினசரி 2 ஆயிரம் பேர் சென்று வந்தனர். இந்தநிலையில் தற்போது வரை ஒரு பாசஞ்சர் ரெயில் கூட இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரெயில்வே இயக்க குழு அதிகாரிகள் கூறியதாவது:
தற்போதைய சூழலில் ஒரு மாநிலம் குறிப்பிட்ட மாவட்டத்துக்கான ரெயில் இயக்கம் குறித்து அந்தந்த மாநில முதல்வர், சுகாதாரத்துறை முதலில் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் பரிந்துரைத்தால் அடுத்த நாள் முதலே ரெயிலை இயக்க நிர்வாகம் தயாராக உள்ளது.
தற்போது பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வரும் பகுதிகளுக்கு அந்தந்த பகுதியில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு மாநில அரசின் ஒப்புதலை பெற்று ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. திருப்பூரை பொறுத்த வரை இதுவரை மாநில அரசுக்கு யாரும் கோரிக்கை விடுக்கவில்லை.
அரசு, சுகாதாரத்துறை தரப்பில் இருந்து அறிவுறுத்தல் இல்லாததால் பாசஞ்சர் ரெயில் இயக்கமும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






