search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரசு பேருந்தில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டர்

    ஆலங்குடி அரசு பேருந்தில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டருக்கு தாயும், மகளும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகளும் மருத்துவ சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை செல்ல கொத்தமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி செல்லும் டவுன் பஸ்சில் ஏறியுள்ளனர். இருவரும் கீரமங்கலத்தில் இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்க பையை தேடினர்.

    ஆனால் பையை காணவில்லை. அதில் இருந்த பணம், மருந்து சீட்டும், தொலைந்து போனது. இதனால் நகரம் சன்னதி சாலையில் இறங்கி அவர்கள் அழுது கொண்டு நின்றுள்ளனர். பின்னர் கீரமங்கலம் பஸ் நிலையத்திற்கு நடந்து வந்து, அங்கு இருந்தவர்களிடம் பையை பார்த்தீர்களா என்று கேட்டுள்ளனர். இதற்கிடையில் அறந்தாங்கியிலிருந்து திரும்பி வந்த அதே பஸை நிறுத்தி, டிரைவர் ஜெயராஜியிடம், பையை குறித்து கேட்டனர். அப்போது கண்டக்டர், அந்த பையில் என்ன இருந்தது என்று கேட்ட போது, ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் மருந்து சீட்டு இருந்ததாக கூறினர். அவர்கள் சொன்னது சரியாக இருந்ததால் பையை அவர்களிடம் ஒப்படைத்தார். பையை பெற்றுக் கொண்ட தாயும், மகளும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 

    Next Story
    ×