என் மலர்

  செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் சகோதரர் புகார் அளித்துள்ளார்.
  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ. புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது சகோதரி பிரேமா (வயது35.)

  இவர் எஸ். ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்து வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

  கடந்த 14-ம் தேதி பிரேமா தனது சகோதரன் வீட்டிற்கு வந்துவிட்டு ஊருக்கு சென்றார். இந்த நிலையில் பிரபாகரனுக்கு போன் செய்து பிரேமாவுக்கு உடல் நலம் சரியில்லை என மகேந்திரன் கூறியுள்ளார். நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்திருப்பதாக தெரிவித்தார்.

  இதனைத் தொடர்ந்து பிரபாகரன் அவசர அவசரமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி சென்றபோது, பிரேமா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன், சகோதரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×