என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
டெங்கு காய்ச்சல்
நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது
By
மாலை மலர்15 Sep 2021 10:41 AM GMT (Updated: 15 Sep 2021 10:41 AM GMT)

டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் நகர பகுதிகளில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கோட்டார் பகுதியை சேர்ந்த 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கோட்டார் பகுதியில் வேறு யாருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
×