என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மேட்டுப்பாளையம் பஸ்சில் நிரம்பி வழியும் கூட்டம்
கோவைக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படும் நிலையில் மேட்டுப்பாளையத்துக்கு அதிகளவில் இயக்கப்படுவதில்லை.
அவிநாசி:
அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்துக்கு தேவைக்கேற்ப பஸ் இல்லாததால், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஊட்டிக்கு செல்லும் அரசு பஸ்சில் அன்னூர், மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளும் ஏற்றப்படுவதால் அதிகளவு கூட்ட நெரிசலில் மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த வழித்தடத்தில் கோவைக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படும் நிலையில் மேட்டுப்பாளையத்துக்கு அதிகளவில் இயக்கப்படுவதில்லை. எனவே பஸ்சில் கூட்ட நெரிசலை தவிர்க்க மேட்டுப்பாளையத்துக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story