என் மலர்

  செய்திகள்

  மாயம்
  X
  மாயம்

  வெம்பாக்கத்தில் மகன்களுடன் பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெம்பாக்கத்தில் மகன்களுடன் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தூசி:

  வெம்பாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் குமுதா. இவரின் மகள் பவித்ரா (வயது 24). இவருக்கும், செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பிரகாஷ் (26) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிரவீன், நவீன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

  பிரகாஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பவித்ரா 10-ந்தேதி இரவு இரு மகன்களை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களை காணவில்லை.

  இதுகுறித்து தூசி போலீசில் புகாா் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பவித்ரா மற்றும் இரு மகன்களை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×