search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    ஈரோட்டில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்

    வீடுகளில் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    மழைக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சலை தடுக்க ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் வெட்டுகாட்டுவலசு என்ற பகுதியில் 6 வயது சிறுமி கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரது ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு
    டெங்கு காய்ச்சல்
    இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    கோப்புப்படம்

    இதேபோல் அன்னை சத்யா நகரில் வெளியூரிலிருந்து வந்த பெண் ஒருவரும் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையிலும் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகர நல அலுவலர் முரளி சங்கர் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் வெட்டுக்காட்டுவலசு, அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    மாநகராட்சி சார்பில் 2 இடங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள 400 வீடுகளை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

    தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் இருக்கும் குடங்களை மூடி வைத்திருக்க வேண்டும். திறந்தவெளியில் தண்ணீர் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம்
    டெங்கு காய்ச்சல்
    பரவ வாய்ப்புள்ளது.

    வெட்டுகட்டு வலசு பகுதியில் சிறுமி ஒருவருக்கும், சத்யா நகரில் பெண் ஒருவருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமாக உள்ளனர். 2 பகுதியிலும் உள்ள 400 வீடுகள் சேர்ந்தவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

    இதில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவுடன் அங்கு மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. மழைக்காலம் நெருங்கி வருவதால் மக்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×