என் மலர்
செய்திகள்

கைது
விருத்தாசலத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
விருத்தாசலத்தில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்றதாக விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அக்பர்(வயது 47), தீர்த்தமண்டப தெருவை சேர்ந்த கொளஞ்சி(50), ராமச்சந்திரன்பேட்டை குள்ள ரவி(39), பழமலைநாதர் நகரை சேர்ந்த சிவக்குமார் மனைவி ரத்னா(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






