என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆலங்குடியில் வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் கல்லுகுண்டுகரையை சேர்ந்தவர் செல்வகணபதி என்ற விஜய் (21). டிரைவரான இவர், சம்பவத்தன்று நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் விஜயை, அரிவாளால் சிலர் வெட்டி கொலை செய்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து மேலசுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த செந்தில் ராஜா, கே.வி.எஸ் தெருவைச் சேர்ந்த தபசுமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய முருகேசன், ராமு, பசுபதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×