என் மலர்
செய்திகள்

பல்லடத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.
போக்குவரத்துக்கு இடையூறு - பல்லடத்தில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் சாலையை ஆக்கிரமித்து கார்களை நிறுத்தியிருந்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலையில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த சாலையில் பத்திரப்பதிவு, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கோர்ட்டு, அரசு கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி என அரசு சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் உள்ளன.
மேலும் அவினாசிக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இப்பகுதி உள்ளது. இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் சாலையை ஆக்கிரமித்து கார்களை நிறுத்தியிருந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் ஓட்டுநர்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் சக்கரங் களுக்கு “பூட்டு” போட்டு பூட்டினர்.
வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு செல்ல வேண்டும். மீறி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி சென்றால் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
Next Story