என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - திருப்பூரில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் மோனிஷா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அப்பியாபாளையத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகள் மோனிஷா (வயது 15). 10-ம்வகுப்பு மாணவியான இவர் அவருடன் படித்து வந்த மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப் படுகிறது.
இதையறிந்த அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மோனிஷாவை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மோனிஷா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் மோனிஷா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






