என் மலர்
செய்திகள்

மழை
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

22-ந் தேதி திருச்சி, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
23-ந் தேதி உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 9 செ.மீட்டர், சின்னக்கல்லார் 8 செ.மீட்டர், சோலையார் 7 செ.மீ., சின்கோனா, பந்தலூர் தலா 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. 21-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

22-ந் தேதி திருச்சி, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
23-ந் தேதி உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 9 செ.மீட்டர், சின்னக்கல்லார் 8 செ.மீட்டர், சோலையார் 7 செ.மீ., சின்கோனா, பந்தலூர் தலா 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... புதிய ஆதீனம் 23ந்தேதி பதவியேற்பு- நித்யானந்தாவின் திடீர் சர்ச்சையால் சிக்கல் ஏற்படுமா?
Next Story