என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
புற்று நோயாளிகளுக்காக தலைமுடியை தானம் செய்த சிறுமி
புற்றுநோயாளிக்கு விக்குகளோ, வேறு ஒட்டு முடிகளோ துளியும் பயன்தராது என்பதை தெரிந்துகொண்டு முடிதானம் செய்தே ஆக வேண்டும் என்று ஆதிரை விரும்பினார்.
திருப்பூர்:
அவிநாசி ஏரித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன். இவரது மகள் ஆதிரை.6-ம் வகுப்பு மாணவி. சிறுமிக்கு இயற்கையாகவே தலைமுடி நல்ல நீளம். மேலும் அடர்த்தியும்கூட. இந்தநிலையில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையால் தலைமுடி பறிபோன ஒரு பெண் நோயாளிக்கு பெண் ஒருவர் தலைமுடி தானம் செய்த செய்தியை ஆதிரை கேள்விப்பட்டுள்ளார்.
இதையடுத்து தன் தலைமுடியையும் தானமாக ஒரு புற்றுநோயாளிக்கு கொடுக்க ஆசைப்பட்டார். அதற்கான ஏற்பாடுகளை அவிநாசி கிழக்கு ரோட்டரி தலைவி, செயலர், பொருளாளர் ஆகியோர் செய்தனர். அதன் மூலம் புற்றுநோயாளிகளுக்காக ஆதிரை 16 இன்ச் முடிதானம் செய்தார்.
இதுகுறித்து ஆதிரையின் தாய் கார்த்தியாயினி கூறுகையில்:
புற்றுநோயாளிக்கு விக்குகளோ, வேறு ஒட்டு முடிகளோ துளியும் பயன்தராது என்பதை தெரிந்துகொண்டு முடிதானம் செய்தே ஆக வேண்டும் என்று ஆதிரை விரும்பினார். அவரது விருப்பத்தின் பேரில் 16 இன்ச் முடி தானம் செய்துள்ளார்.
புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண் நோயாளிக்கு தானமாக தருகிறவர் தலைமுடி குறைந்தபட்சம் 8 இன்ச் நீளமாவது இருக்க வேண்டும். ஆனால் ஆதிரை 16 இன்ச் முடிதானம் செய்துள்ளார் என்றார்.
Next Story