என் மலர்
செய்திகள்

கைது
காஞ்சீபுரம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது
காஞ்சீபுரம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். வாலாஜாபாத் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருக்குப்பேட்டை கிராமத்தில் சூதாட்டம் நடந்து வருவதாக வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் கருக்குப்பேட்டை பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏகனாம்பேட்டை கிராமம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.
Next Story






