என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ. 20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- வியாபாரி கைது

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ. 20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடாக வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் ரைஸ்மில்லில் உள்ள வளாகத்தில் அறையை இனாம் கரிசல்குளத்தைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 36) என்பவர் மசாலா பாக்கெட் விற்பனை செய்வதாக கூறி வாடகை அடிப்படையில் ரைஸ்மில் வணிக வளாக உரிமையாளர் பாபுவிடம் பேசி கடை நடத்தி வந்துள்ளார்.

    ஆனால் நவநீதகிருஷ்ணன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அறையில் பதுக்கி வைத்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தனிப் படைக்கு தகவல் வந்தது.

    அதன் அடிப்படையில் மில் வளாகத்தில் அந்த அறையை போலீசார் சோதனை செய்தனர். அங்கு 158 மூட்டைகளில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களும் ரூ.7 லட்சத்து 48 ஆயிரமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம், ஆய்வாளர் கீதா மற்றும் போலீசார் உடன் இருந்தனர். சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி. நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் கீதா, சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

    Next Story
    ×