search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவண்ணாமலையில் தொடரும் வழிப்பறி: பெண் பக்தரிடம் செயின் பறிப்பு

    மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் திருவண்ணாமலை மக்களிடமும், கிரிவலம் சென்ற பக்தர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆதிசே‌ஷன் நகரை சேர்ந்தவர் ராதா (வயது41). இவர் நேற்று மாலை கிரிவலப்பாதையில் ரமணாசிரமம் செல்லும் வழியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் சென்று வழிபட்டார்.

    இரவு7.30 மணி அளவில் வீட்டுக்கு செல்வதற்காக அக்னி தீர்த்தக்குளம் அருகில் அமைந்துள்ள டீக்கடைகள் இருக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு மின் விளக்கு எரியாததால் இருட்டாக இருந்தது.

    இதனை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராதா அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தார். அந்த வழியாக கிரிவலம் சென்ற பக்தர்கள் வாலிபரை பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் தப்பி சென்றுவிட்டார். தாலி செயினை மர்ம நபர் பறித்து சென்றதால் வேதனை அடைந்த அவர் கதறி அழுதார்.

    சம்பவ இடத்திற்கு வந்த ராதாவின் உறவினர்கள் அவருக்கு உடனடியாக மஞ்சள் கயிறு அணிவித்தனர். அருகில் உள்ள அம்மன் சன்னதியில் இருந்து குங்குமம் எடுத்து அவரது நெற்றியில் வைத்தனர். இதுபற்றி ராதா டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தது. செயின் பறிப்பு நடந்த இடத்தில் கண்காணிப்புகேமரா இருப்பதால் அதன் காட்சிகளை பார்த்து செயின் பறித்த நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் திருவண்ணாமலை மக்களிடமும், கிரிவலம் சென்ற பக்தர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிரிவலப்பாதையில் இதே போன்று அடிக்கடி வழிப்பறி நடக்கிறது. கடந்த வாரம் எமலிங்கம் பகுதியில் கிரிவலம் சென்ற ஒரு இளம் பெண்ணிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற செயல்களில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×