search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    கோபிசெட்டிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பாரபட்சம் காட்டுவதாக கூறி கோபி- ஈரோடு மெயின்ரோடு குள்ளம்பாளையம் பிரிவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 40 பேர் திடீரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 107 இடங்களில் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு 10 ஆயிரத்து 700 பேருக்கு செலுத்தப்பட்டது. ஒவ்வொரு மையங்களிலும் முதலில் வந்த 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ஈரோடு மாநகர் பகுதியில் இன்று 20 இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. முதலில் வந்த 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் செலுத்தப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்து நின்ற மற்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஒரு சில மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உடையாம்பாளையம் பகுதி 7,8-வது வார்டுகளில் 400-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பாரபட்சம் காட்டுவதாக கூறி கோபி- ஈரோடு மெயின்ரோடு குள்ளம்பாளையம் பிரிவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 40 பேர் திடீரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் அங்கு வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாரபட்சமில்லாமல் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    Next Story
    ×