என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.
    X
    கடலூரில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில், பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கடலூர் சி.ஐ.டி.யு. அலுவலகம் முன்பு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஒப்பாரி வைத்தும், சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிகளுக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைப்பது போன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி தலைமை தாங்கினார். மின்வாரிய ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேசிங்கு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், மாநிலக்குழு கிருஷ்ணமூர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தகுமாரி, மனோரஞ்சிதம், மீரா, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அம்முனி, கவிதா, சரளா, மாலதி, வேல்விழி, கர்ணா, ஜெயலட்சுமி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சாமானிய மக்களை பாதிக்கும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விலை உயர்வுக்கு காரணமான வரியை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    Next Story
    ×