என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சசிகலா
நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினாரா?- சசிகலா விளக்கம்
By
மாலை மலர்14 July 2021 11:10 PM GMT (Updated: 14 July 2021 11:10 PM GMT)

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு என்னை சிறையில் அடைத்து அவ்வளவு கொடுமைகளை தந்தார்கள். அதற்கே நான் அசரவில்லை.
சென்னை:
சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்கல்லை சேர்ந்த சுகந்தி, அம்பிகா பூபதி மற்றும் குவைத் நாட்டை சேர்ந்த சக்திவேல்ராஜன் ஆகியோருடன் சசிகலா தொலைபேசியில் பேசினார்.
அதன் விவரம் வருமாறு:-
எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற வேண்டும் என்பது தான் என் எண்ணம். அப்படி செய்திருந்தால் நிச்சயம் வெற்றிபெற்று ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்திருக்கும். இனிமேலும் கட்சி வீணாவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அரசியலை விட்டு விலகி இருக்கும்படி என்னை யாராவது நிர்பந்தித்தார்களா? என தொண்டர்கள் கேட்கிறார்கள். என்னை யாராவது நிர்பந்தப்படுத்த முடியுமா? என்னையே வேண்டாம் என்று சொல்லும்போது நான் என்ன செய்யமுடியும்? தனியாக நின்று 150 இடங்கள் வரை வெற்றிபெறுவோம் என்றார்கள். நானும் கட்சி வெற்றிக்காக அமைதியாக இருந்தேன்.
மற்றபடி என்னை யாராலும் நிர்பந்திக்க முடியாது. நான் யாருக்கும் பயப்படுபவளே கிடையாது. 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு என்னை சிறையில் அடைத்து அவ்வளவு கொடுமைகளை தந்தார்கள். அதற்கே நான் அசரவில்லை.
இவ்வாறு சசிகலா பேசினார்.
Next Story
×