என் மலர்
செய்திகள்

கொள்ளை
சிதம்பரத்தில் 2 கடைகளை உடைத்து பணம் கொள்ளை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2 கடைகளை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் லால்கான் தெருவில் கேரள ஹாட் சிப்ஸ் கடை மற்றும் அதன் அருகே மருந்தகம் உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் உரிமையாளர்கள் கடைகளை பூட்டிவிட்டு சென்றனர்.
நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 2 கடைகளின் பூட்டை உடைத்தனர். பின்னர் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளருக்கும், நகர போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த 2 கடைகளையும் பார்வையிட்டு கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஹாட் சிப்ஸ் கடையில் ரூ.15,000 மற்றும் மருந்து கடையில் ரூ.10,000 கொள்ளை போய் உள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






