என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் மரவள்ளிகிழங்குகள் வீணாகும் அவலம்
மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி உள்ளிட்ட பலவகை பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுகிறது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் பகுதியில் பாசன நீர் தட்டுப்பாடு உள்ள விளைநிலங்களில் மாற்றுப்பயிராக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சாகுபடியான மரவள்ளிக்கிழங்கு தற்போது அறுவடை நடக்கிறது. ஆனால் கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி உள்ளிட்ட பலவகை பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் முடங்கியுள்ளது.இதனால் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. கிழங்குகளை நடவு செய்த 8 மாதத்தில் இருந்து அறுவடை தொடங்கலாம். தொடர்ந்து 12 மாதம் அறுவடையில் ஈடுபடலாம். ஆனால் ஓராண்டு கடந்தும் கிழங்குகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகிறது. இதுகுறித்து அரசு கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.
Next Story






