என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புப்படம்
கொரோனா ஊரடங்கால் சிறு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்பு
By
மாலை மலர்25 Jun 2021 9:01 AM GMT (Updated: 25 Jun 2021 9:01 AM GMT)

தமிழக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருவதால் ஏராளமானவர்கள் இந்த தொழிலை செய்து வரு கிறார்கள். இதனால் திரும்பும் திசையெங்கும் பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் ஏற்றுமதி நிறுவனங்களை விட உள்நாட்டு பனியன்கள் உற்பத்தி செய்யும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏராளம், ஆண்டுக்கு கணிசமான அளவு உள்நாட்டு வருவாயை இந்த நிறுவனங்கள் ஈட்டி வருகின்றன.
இதன்காரணமாக திருப்பூரின் முதுகெலும்பாக சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இந்தநிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் சிறு, குறு மற்றும நடுத்தர பனியன் உற்பத்தி நிறுவனங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சிறப்பு சலுகைகள் இந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது:-
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத்தினர் பலரும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே தமிழக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்றனர்.
Next Story
×