search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    டாஸ்மாக் கடைகளில் ரூ.5 கோடிக்கு மதுபானம் விற்பனை

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
    திருவண்ணாமலை:

    கொரோனா தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 219 கடைகளும் மூடப்பட்டது.

    கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் சில மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அரசு தரப்பில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

    டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. தொடர்ந்து நேற்றும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்றனர்.
    Next Story
    ×