search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடையின் சுவரில் துளைப்போடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    டாஸ்மாக் கடையின் சுவரில் துளைப்போடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    சிதம்பரத்தில் டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டு

    சிதம்பரத்தில் டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்களை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகே, பொராம்பட்டு மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக பால்ராஜ் (வயது 47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். முழு ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 9-ந்தேதி கடையை பூட்டினர். இதன் பின்னர் பால்ராஜ் தினசரி கடையை வந்து பார்த்து சென்றுள்ளார்.

    நேற்று முன்தினம் கடையை வந்து பார்த்த போது, பின்பக்க சுவரில் துளை போடப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த 100 மதுபாட்டில்களை காணவில்லை.

    இதுபற்றி அவர் அண்ணாமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி நேரில் சென்று டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர்.

    பின்பக்க சுவரை துளைப்போட்டு, அதன் வழியாக கடைக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் ரூ.19 ஆயிரத்து 500 மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×