search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 22 பேர் பலி

    கடந்த மாதம் 5,000-ஐ தொட்ட கொரோனா தொற்று கடந்த வாரம் முதல் படிப்படியாக குறைந்து வருகிறது.

    பெரம்பலூர்:

    திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் கொரோனா தாக்கம் சற்று தணிந்துள்ளது.

    கடந்த மாதம் 5,000-ஐ தொட்ட கொரோனா தொற்று கடந்த வாரம் முதல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய பரிசோதனை முடிவில் மத்திய மண்டலத்தில் 3,865 பேருக்கு தொற்று உறுதியானது. ஆனால் நேற்று ஒரே நாளில் 77 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 22 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 15 பேரும், நாகப்பட்டினத்தில் 13 பேரும், கரூரில் 8 பேரும், புதுக்கோட்டையில் 7 பேரும், அரியலூர், திருவாரூரில் தலா 5 பேரும், தஞ்சாவூரில் 2 பேரும் கொரோனாவுக்கு இரையாகினர்.

    நேற்றைய தினம் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 1,004 பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஆனால் திருச்சியில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. நேற்றைய தினம் 689 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்த சில தினங்களில் தினசரி பாதிப்பு 500-க்குள் வந்து விடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    திருவாரூரில் 576 பேரும், நாகப்பட்டினத்தில் 516 பேரும், பாதிக்கப்பட்டனர். கரூரில் கொரோனா தொற்று 337 ஆக குறைந்துள்ளது.

    மேலும் புதுக்கோட்டையில் 288 பேரும், அரியலூரில் 246 பேரும், பெரம்பலூரில் 209 பேரும் நேற்று தொற்றுக்கு ஆளாகினர்.

    Next Story
    ×