என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிதம்பரம் அருகே 2 போலி டாக்டர்கள் கைது

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மருத்துவபடிப்பு எதுவும் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் எந்தவித அனுமதியுமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அண்ணா மலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அந்த வீட்டில் ஊசி, மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வீட்டில் இருந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சிவபுரி வாய்க்கால்கரை தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 63), வடபாதி தெருவை சேர்ந்த சச்சிதானந்தம் (65) என்பதும், அவர்கள் 2 பேரும் மருத்துவபடிப்பு எதுவும் படிக்காமல் அந்த பகுதியில் உள்ள மெடிக்கல்களில் இருந்து ஊசி, மருந்து, மாத்திரைகளை வாங்கிவந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். வீட்டில் இருந்த மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×