என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 1000-க்கு கீழ் சரிந்தது : புதிதாக 992 பேருக்கு தொற்று - 23 பேர் பலி

    புதுச்சேரியில் ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடு போன்ற அரசின் நடவடிக்கைகளால் தற்போது தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
    புதுச்சேரி :

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகமாக இருந்து வந்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

    இந்தநிலையில் ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடு போன்ற அரசின் நடவடிக்கைகளால் தற்போது தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 1000-க்குகீழ் சரிந்தது. அந்த வகையில் 992 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 23 பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×