என் மலர்
செய்திகள்

துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- ஆளுநர் தமிழிசை உத்தரவு
புதுச்சேரியில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மே 31-ந்தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சூழ்நிலைக்கு ஏற்ப மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து வருகின்றன. அதன்படி நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், புதுச்சேரியில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மே 31-ந்தேதி வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொது அடைப்பு மே 24 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்கள் துணையோடு ஏற்கனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை தொடரும்.நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.விரிவான அரசாணை வெளியிடப்படும். pic.twitter.com/24Z30sFe0z
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) May 23, 2021
மேலும் நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும் விரிவான அரசாணை வெளியிடப்படும் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story






