என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி
    X
    டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி

    ஜெயங்கொண்டத்தில் ‘டிரோன்’ மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடக்கம்

    ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொற்று அதிகம் பாதித்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து நகராட்சி சார்பில் ‘டிரோன்’ மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் மேற்பார்வையில் தொடங்கியது. இந்த டிரோன் கருவியானது 12 கிலோ எடையில், 12 லிட்டர் கிருமி நாசினியை வான்வழி மூலம் தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொற்று அதிகம் பாதித்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் டிரோன் குழுவினர் வரவழைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×