என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.
    X
    ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

    இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்- பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

    சாலை சந்திப்புகளில் ஒலிபெருக்கி மூலம் போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வையும், அறிவுறுத்தல்களையும் அளித்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நண்பகல் 12 மணிக்குள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. புதுவை முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து அனைத்து வாகனங்களை சோதனையிட்டு அனுப்புகின்றனர்.

    இதில் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு காரணத்தை கேட்டுத்தான் அனுப்புகிறார்கள். முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    சாலை சந்திப்புகளில் ஒலிபெருக்கி மூலம் போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வையும், அறிவுறுத்தல்களையும் அளித்து வருகின்றனர்.

    இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும், ஆட்டோக்களில் இருவர், கார்களில் 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியது.

    தேவையின்றி சாலையில் சுற்றித் திரியக்கூடாது, மருத்துவ தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும், மற்றபடி வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் போலீசார் தெரிவிக்கின்றனர்.



    Next Story
    ×