search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமராவதி அணை
    X
    அமராவதி அணை

    அமராவதி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

    உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை  அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் அமராவதி ஆற்றில் உள்ள முதல் 6 பழைய ராஜ வாய்க்கால்களில் உள்ள 4686 ஏக்கர்  பாசன பகுதிகளுக்கு மே 16-ந்தேதி முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை மொத்தம் 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது 55 நாள்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில்,  முதல் போக பாசனத்துக்காக அணையில் இருந்து ஆற்று மதகுகள் வழியாக மொத்தம் 1,728 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து  விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாகுபடிகளை தொடங்கிய நிலையில் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×