search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    முழு ஊரடங்கு எதிரொலி- ஈரோட்டில் 2வது நாளாக ரூ.15¾ கோடிக்கு மது விற்பனை

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி சென்றார்கள்.
    ஈரோடு:

    தமிழகத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 8-ந் தேதி காலையில் வெளியானது. இந்த ஊரடங்கையொட்டி 8-ந் தேதியும், 9-ந் தேதியும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக 2 வாரங்களுக்கு மது கிடைக்காது என்பதால், டாஸ்மாக் கடைகளை நோக்கி மது பிரியர்கள் படை எடுத்தார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி சென்றார்கள். மேலும், பலர் மது பாட்டில்களை அள்ளிச்சென்றதையும் காணமுடிந்தது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 8-ந் தேதி ஒரே நாளில் ரூ.16 கோடியே 76 லட்சத்துக்கு மது விற்பனையானது. நேற்று முன்தினமும் மது விற்பனை ஜோராக நடந்தது. பலர் பெரிய பைகளை கொண்டு வந்து அதிக மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.

    2-வது நாளான நேற்று முன்தினமும் ஒரே நாளில் ரூ.15 கோடியே 70 லட்சத்து 8 ஆயிரத்து 650-க்கு மதுவிற்பனையாகி உள்ளது. எனவே 2 நாட்களில் சுமார் ரூ.32 கோடிக்கு மது விற்பனையானது.
    Next Story
    ×