என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

உடுமலை அருகே கயிறு ஆலையில் தீவிபத்து

உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள கியாஸ் குடோன் பின்புறம் கயிறு திரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது.
இருப்பினும் தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த விலைமதிப்புமிக்க 14 எந்திரங்கள் எரிந்து நாசமானது. கயிறுகளும் எரிந்து நாசமாகின. மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொழிற்சாலை முன்புறம் உள்ள கியாஸ் குடோனில் தீ பரவியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். தீயணைப்பு வீரர்கள் சுதாரித்து செயல்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.