search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கயத்தாறில் கோவிலில் கொள்ளையடித்த 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கயத்தாறில் கோவிலில் கொள்ளையடித்தது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு முத்தாரம்மன் கோவில் தெருவில் மாரியம்மன், நாகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு பக்தர்கள் காணிக்கை செலுத்த சில்வர் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு இந்த கோவில் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றனர். எனினும் தொடர்ந்து அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் நெல்லை சங்கர் நகர் அருகே உள்ள தாதனூத்தை சேர்ந்த பால்துரை (வயது33), முத்து ராஜ் (30), கங்கைகொண்டான் துறையூர் காலனியை சேர்ந்த முருகன் (45) என்பதும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து உண்டியலில் திருடப்பட்ட ரூ.2 ஆயிரம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×