என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்மர் மருத்துவமனை
    X
    ஜிப்மர் மருத்துவமனை

    ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு

    ஜிப்மரில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக கிடைக்கவில்லை. இந்த மருந்தை வெளியில் வாங்கி வரும்படி மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்வதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் புதுவை மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது ஜிப்மரில் கெரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுவது வழக்கம்.

    ரெம்டெசிவிர்

    ஆனால், ஜிப்மரில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக கிடைக்கவில்லை. இந்த மருந்தை வெளியில் வாங்கி வரும்படி மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்வதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    வெளிச்சந்தையிலும் இந்த மருந்து கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே மத்திய அரசு ஜிப்மர் மருத்துவமனைக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஜிப்மரில் தமிழக பகுதிகளை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருவதால் தமிழக மற்றும் புதுவை அரசுகள் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×