என் மலர்
செய்திகள்

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 3 கொரோனா நோயாளிகள் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறையா?
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர்:
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பேர் இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு வார்ட்டில் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை என நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
உடல்நலக் குறைவு காரணமாகவே நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அல்ல, உயிரிழந்தவர்களில் 2 பேர் கொரோனா நோயாளிகளே அல்ல. ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது முற்றிலும் தவறான தகவல். அடுக்கம்பாறை மருத்துவமனையில் தயாராகவுள்ள படுக்கைகளில் 50% நோயாளிகளே உள்ளனர் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கவில்லை. சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பால் நோயாளிகள் உயிரிழந்தாக மருத்துவமனை டீன் செல்வி தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story






