என் மலர்
செய்திகள்

கிராம மக்கள் பொக்லைன் எந்திரம், லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
திருமருகல் அருகே மண் குவாரியை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
திருமருகல் அருகே கொங்கராயநல்லூரில் உள்ள மண் குவாரியை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் கிராமத்தில் அரசு அனுமதியுடன் மண்குவாரி இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று குவாரியில் இருந்து மண் எடுக்க லாரிகள் வருவதைக் கண்ட கிராம மக்கள் திடீரென குவாரியை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் மண்குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன், கனிமவளத் துறை ஆய்வாளர் விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திட்டச்சேரி பாலமுருகன், திருக்கண்ணபுரம் இரணியன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மேலும் கனிம வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் குவாரி இயங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Next Story






