search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை- குடிநீர் தேக்க ஏரி நிரம்பியது

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது.
    ராஜபாளையம்:

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது.

    இதனால் ராஜபாளையத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரி அதன் முழு கொள்ளளவான 18 அடியை எட்டி நிரம்பியது. மழை காரணமாக அய்யனார் கோவில் ஆறு, முள்ளியாறு, பேயனாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இதேபோல் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. தேவதானம் பகுதியில் பெய்த மழையால் சாஸ்தா கோவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திடீர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×