search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வத்திராயிருப்பு பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
    வத்திராயிருப்பு:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முக கவசம் இ்ல்லாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன் முக கசவம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் போலீசார், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    தமிழக அரசு விதிக்கும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அனைவரும் கடைபிடித்தால் கண்டிப்பாக கொரோனா தாக்குதலில் இருந்்து விடுபடலாம் என போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

    Next Story
    ×