search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுவையில் கொரோனா 2-வது அலை: நாள்தோறும் அதிகரிக்கும் தொற்று

    பொது மக்கள் மீண்டும் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 237 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 145, காரைக்காலில் 68, ஏனாமில் 9, மாகியில் 15 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் தற்போது 360, காரைக்காலில் 51, ஏனாமில் 12, மாகியில் 3 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 93, காரைக்காலில் 37, மாகியில் 9 பேர் என 139 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 42 ஆயிரத்து 776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 426 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 40 ஆயிரத்து 317 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 882, காரைக்காலில் 394, ஏனாமில் 18, மாகியில் 53 பேர் என ஆயிரத்து 347 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது ஆயிரத்து 773 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 684 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் புதுவை சாரத்தை சேர்ந்த 62 வயது பெண், காரைக்காலை சேர்ந்த 87 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 686 ஆக உயர்ந்துள்ளது.

    இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அதிகபட்சமாக நேற்று 237 பேருக்கு தொற்று பரவியதுடன், 2 பேர் இறந்துள்ளனர். இதனால் புதுவையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொது மக்கள் மீண்டும் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×